நற்செய்தி

முழுமனதோடு அன்பு செய். இறைவனையும், மனிதனையும்.

கோபத்திலிருந்து விடுபட இவை இரண்டும் போதும் !

Posted by Stella on August 7, 2008

அடிக்கடி கோபப்படுகிறேன். இந்த கோபத்திலிருந்து எப்படி விடுபடுவது என தெரியாமல் புலம்புகிறீர்களா ? சிலவற்றை நீங்கள் கவனத்தில் கொள்வது சிறந்தது.

முதலில், கோபம் என்பது பலவீனம் அல்ல அது பாவம் என்பதை உணர்தல்.
சகோதரன் மீது கோபம் கொள்பவன் பாவம் செய்கிறான் என்று விவிலியம் எச்சரிக்கிறது.

நீ காணிக்கை செலுத்த வரும்போது யாருக்கேனும் உன்னுடன் மனத்தாங்கல் இருப்பதால் நினைவுற்றால் காணிக்கை செலுத்தும் முன் சென்று அவனுடன் சமாதானம் செய்து கொள் – என்கிறார் இயேசு.

விவிலியம் கோபத்தை விட்டொழிக்கவும், பலமான உறவுகளைக் கட்டியெழுப்பவும் நம்மை அழைக்கிறது. அதை நிறைவேற்ற இறைவனின் அருளைப் பெறுதல் அவசியம்.

கோபத்தை விட்டொழிக்க செய்யவேண்டிய 2 செயல்கள் இவையே.

1. கோபம் வந்தால் கோபப்படுகிறோம் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். கோபப்பட்டது பாவம் என்பதை உணர்ந்த மறு வினாடியே இறைவனிடம் மனமுருகி மன்னிப்புக் கேட்க வேண்டும்
2. இறைவனிடம் மன்னிப்புக் கேட்ட உடன் சம்பந்தப்பட்ட அந்த நபரிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் !

இறைவனிடம் மன்னிப்புக் கேட்பது எளிது ! ஆனால் அடுத்தவரிடம் மன்னிப்புக் கேட்பது பலருக்கும் கடினமானது. காரணம் நமது போலித்தனமான வாழ்க்கை !

இயேசு சொல்கிறார், தன்னைத் தாழ்த்தாதவன் உயர வழியே இல்லை. இயேசு வாழ்க்கையில் செயல்படுத்தியவற்றையே போதித்தார். சிம்மாசனத்தில் அமந்து கொண்டு அவர் தாழ்மையைப் போதிக்கவில்லை, சீடர்களின் கால்களையும், அழுக்கான பாதங்களையும் கழுவி அதை தமது துண்டாலேயே துடைத்து நமக்கு முன்மாதிரிகையும் காட்டுகிறார்.

தாழ்மை நிலையைக் கொள்ளுங்கள். கர்வம், ஈகோ அனைத்தையும் ஒரு மிகப்பெரிய கோணிப்பையில் கட்டி கடலில் போட்டு விடுங்கள்.

கடவுளிடம், மனிதரிடம் என இந்த இரண்டு மன்னிப்புப் பழக்கத்தை நீங்கள் கடைபிடித்தால் ஒரே ஒரு ஆண்டுக்குள் கோபத்திலிருந்து முழுமையாய் விடுதலை அடையலாம். இவற்றைக் கடைபிடிக்கும் உறுதிக்காய் இறைவனை மன்றாடுங்கள்.

நினைவில் கொள்ளுங்கள், கோபம் பலவீனமல்ல … பாவம் !

2 Responses to “கோபத்திலிருந்து விடுபட இவை இரண்டும் போதும் !”

  1. vasu said

    hi

  2. ஆனந்தன் said

    சிறப்பாக உள்ளது.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>