நற்செய்தி

முழுமனதோடு அன்பு செய். இறைவனையும், மனிதனையும்.

என்னைப் பற்றி

மதம் என்பது மனித நேயம் சார்ந்தது. மனிதனை அன்பு செய்வதன் மூலம் இறைவனை அன்பு செய்வதும், இறைவனை அன்பு செய்வதற்காய் மனித நேயத்தை மனங்களில் நிறைப்பதுமே மதத்தின் ஆழம் என்று கருதுகிறேன். இறையில் சரணடைதல் என்பதே மானிட வாழ்வின் புனிதத்துவத்தைக் காப்பாற்றுதலில் தான் அடங்கியிருக்கிறது. எனில் ஆன்மீகம் என்பது இறையின் சிந்தனைகளையும், போதனைகளையும் உள்வாங்கி செயலாக்கம் செய்வதே.

இந்த தளத்தில்
நான் சார்ந்த மதத்தின் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
தவறுகள் ஏதேனும் இருந்தால் மன்னியுங்கள்.
மன்னிப்பு தூய்மையான வாழ்வின் அடிப்படை

அன்புடன்
ஸ்டெல்லா

14 Responses to “என்னைப் பற்றி”

  1. Sinnavan said

    தங்களின் கதைகள் அருமை.

    பலருக்கு இது உபயோகமாக இருக்கும்.

    தமிழ் மன்றம் என்ற இடத்தில் தங்கள் கதைகளை கொடுக்க ஆசைப்படுகிறேன். தங்களின் அனுமதி தேவை.

  2. அன்பிற்கினிய ஸ்டெல்லா,

    இறை என்ற வார்த்தை கண்டதும் உங்கள் வலைப்பூவிற்கு பறந்து வந்தேன்.

    என்னைப் பற்றி – என்ற தலைப்பில் எழுதியுள்ளதை படிக்கத் துவங்கினேன்.

    உடனே அன்புடன் என் எதிர் கருத்துக்களை சொல்லத் துடிக்கிறேன் என்பதால் என் கருத்துக்களை எழுதுகிறேன்.

    //மதம் என்பது மனித நேயம் சார்ந்தது. மனிதனை அன்பு செய்வதன் மூலம் இறைவனை அன்பு செய்வதும், இறைவனை அன்பு செய்வதற்காய் மனித நேயத்தை மனங்களில் நிறைப்பதுமே மதத்தின் ஆழம் என்று கருதுகிறேன்//

    இல்லை அம்மா! மதம் என்பது ஒரு வெறி.. யானைக்கு மதம் என்பார்கள் தெரியுமா?

    இறைவன் ஒருவர் அது கர்த்தராகிய இயேசு கிறுஸ்துவே.. இதுவே வேதம் போதிக்கிறது. அதை உண்மை என்று நம்பும் பல கோடிகளில் நானும் ஒருவன்.

    ஆனல் கர்த்தர் ஒரு போது ஒரு மதத்தை உருவாக்கவில்லை.. இதை மிகத் தெளிவாக அறிந்து உணர்ந்தவன் நான்.

    இறைவன் மனிதர்களின் அன்பிற்காக ஏங்கவில்லை. மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்ட அவர் எதிர்பார்க்கிறார்.

    /இறையில் சரணடைதல் என்பதே மானிட வாழ்வின் புனிதத்துவத்தைக் காப்பாற்றுதலில் தான் அடங்கியிருக்கிறது. எனில் ஆன்மீகம் என்பது இறையின் சிந்தனைகளையும், போதனைகளையும் உள்வாங்கி செயலாக்கம் செய்வதே//

    அழகாக சொன்னீர்கள்!

    //இந்த தளத்தில்
    நான் சார்ந்த மதத்தின் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
    தவறுகள் ஏதேனும் இருந்தால் மன்னியுங்கள்.
    மன்னிப்பு தூய்மையான வாழ்வின் அடிப்படை//

    தன்னை தாழ்த்துபவன் உயர்த்தப்படுவான் – என்ற வேதவசனத்தின் படி உங்கள் எழுத்துள்ளது. நீங்கள் கண்டிப்பாக இறை அன்பும் கருணையும் நிறைந்தவராகத் தான் இருக்க முடியும்.

    உங்களுக்கு எல்லா நனமைகளும் உண்டாக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

    பாசமுடன்
    என் சுரேஷ், சென்னை
    செல்பேசி 98403 44175

  3. Stella said

    உங்கள் கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் சுரேஷ். அடிக்கடி வருகை தாருங்கள்.

  4. arulrajan said

    Dear stella sister

    Happy to read all ur web … thanks for nice website

    ur friend in christ
    arulrajan

  5. arulrajan said

    Dear sister

    Thanks for good website

    arulrajan

  6. அன்பிற்கினிய ஸ்டெல்லா

    உங்களின் மின்னஞ்சல் விலாசம் தெரிவிக்கவும்.

    அன்புடன்
    என் சுரேஷ்

  7. அன்புள்ள சகோதரி ஸ்டெல்லா அவர்களுக்கு உங்களின் முயர்ச்சி வெற்றி பெற ஆண்டவர் கிருபை செய்வராக்.

  8. அன்புள்ள சகோதரி ஸ்டெல்லா அவர்களுக்கு உங்களின் முயர்ச்சி வெற்றி பெற ஆண்டவர் கிருபை செய்வராக்

  9. விருபா பதிவில் தங்கள் தளம் பார்த்தேன். மதத்தால் மனிதநேயம் பேண முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.

    நம்பிக்கையோடு நீங்கள் தொடர்வது, சிந்திக்கத் தூண்டுகிறது.

  10. rameshps said

    ஸ்டெல்லா சகோதரிக்கு அன்பின் வாழ்த்துக்கள்.
    தங்களின் இந்த தளம் மிகவும் நன்றாக உள்ளது. நல்ல முயற்சி.

    ஒரு விஷயம். உலகிலுள்ள எல்லா மனிதற்கும் மீட்பை உண்டுபண்ண வந்த இயேசுகிறிஸ்து எந்த ஒரு மதத்தையும் ஸ்தாபிக்க வரவில்லை.

    அவ‌ரே மனிதர்களிடத்தில் அன்பாய் இருக்கிறார். அத‌னால் அவரின் அன்பை உணர்ந்தவர்கள் மனிதர்களிடம் அன்பை காட்டாதிருக்கமுடியாது.

    உங்க‌ளின் இந்த‌ முய‌ற்சியை இறைவ‌ன் ஆசிர்வ‌தித்து அனேக‌ருக்கு ஆசிர்வாத‌மாக வைப்பாராக‌. ந‌ன்றி. தொடர்ந்து செய்யுங்க‌ள். இறைவன் உங்களோடு.

  11. Rukmani said

    உங்கள் தளம் மிகவும் பிரயோஜனமாக இருந்தது, நன்றி தொடர்ந்து இன்னும் பல பதிவுகளை கொடுக்க வாழ்த்துக்கள்.

  12. Stella said

    வருகை தந்த அனைவருக்கும் எனது உளம் கனிந்த நன்றிகள். தொடர்ந்து வருகை தாருங்கள். உங்கள் உள்ளங்களையும், இல்லங்களையும் இறை அமைதி நிறைக்கட்டும்.

  13. இனிய சகோதரிக்கு

    உங்களின் ஊழியத்தை இறைவன் ஆசிர்வதிப்பாராக‌. உங்களின் மின்னஞ்சல் விலாசம் தெரிவிக்கவும்

    நன்றி
    கிறிஸ்துநேசன்

  14. Santhana said

    Hi my dear sis ur site just amazing..may the almighty bless u..keep ur work going on

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>